டாக்டர்கள் மனசாட்சியோடு பணியாற்ற வேண்டும்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
குறிஞ்சிப்பாடி: டாக்டர்கள் மனசாட்சியோடு பணியாற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நலக் கல்வி, வளைகாப்பு மற்றும் மகப்பேறு நிதியுதவி வழங்கும் விழா குறிஞ்சிப்பாடியில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு அமைச்சர் பன்னீர் செல்வம் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதிஉதவி வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,
தி.மு.க., ஆட்சி வந்த பிறகுதான் மருத்துவத் துறை சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் 6 ஆயிரத்து 947 டாக்டர்கள், 11 ஆயிரத்து 948 செவிலியர்கள், ஆயிரத்து 288 கிராமபுற செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,218 பொது ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பயனடையும் வகையில் மருத்துவ துறை இயங்குகிறது. முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 20 லட்சத்து 11 ஆயிரத்து 500 கர்ப்பிணி பெண்களுக்கு ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நலத்திட்டங்களே செயல்படுத்தப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர். அனைத்து டாக்டர்களும் பணி நேரத்தில் பணியில் இருப்பதுடன் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications