எனது போன் 4 வருடமாக ஒட்டுக் கேட்பு- மமதா புகார்

வரும் 30ம் தேதி மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையே பெரும் மோதல் வெடித்து கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
இந் நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசிய மம்தா, தொலைபேசி ஒட்டுக் கேட்பு என்பது புதிய விஷயமில்ல. எனது போனைக் கூடத்தான் நான்கு வருடங்களாக ஒட்டுக் கேட்டு வருகின்றனர். நானும் இதைக் கூறிக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால் இதை யாருமே காது கொடுத்துக்கூட கேட்பதில்லை. ஆனால் போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக டெல்லியில் வைத்து யாராவது கூறினால்அதை பெரிதாக்கி அமளியாக்கி விடுகிறார்கள்.
மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சியல்ல என்பதை அந்தக் கட்சித் தலைவர்கள் உணர வேண்டும். அது ஒரு கூட்டணி அரசு. அதை மறப்பது காங்கிரசுக்கு நல்லதல்ல என்றார் மமதா.
முன்னதாக திரினமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முகுல் ராய் கூறுகையில், மமதாவின் லேன்ட்லைன் மற்றும் செல்போன்கள் தொடர்ந்து ஒட்டுக்கேட்கப்பட்டு வருகிறது. இதை செய்வது மேற்கு வங்க மாநிலத்தின் இடதுசாரி அரசு என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications