காட்டுக்குள் சூதாட்டம்-10 பேர் கைது- ரூ.6 லட்சம் நகை, பைக் பறிமுதல்
திசையன்விளை: திசையன்விளை அருகே காட்டுபகுதியில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 6 லட்சத்து 22 ஆயிரத்து 250 ரூபாய் மதிப்புள்ள 11 பவுன் செயின், 2 பவுன் மோதிரம், ஒரு வெள்ளி கொலுசு, 9 செல்போன், 6 பைக், 26 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திசையன்விளை அருகே உள்ள சங்கானகுளம் காட்டுபகுதியில் பணம் வைத்து பெரிய அளவில் சூதாட்டம் நடப்பதாக போலீஸ் எஸ்பி ஆஸ்ரா கார்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
வள்ளியூர் டிஎஸ்பி பொறுப்பு உதயகுமார் தலைமையில் திசையன்விளை இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு, திசையன்விளை சப்-இனஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று இரவு காட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர்.
அப்போது பணம் வைதது சூதாடிக் கொண்டிருந்தவர்கள் போலீசை கண்டதும் நாலாபுறமும் தப்பியோடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த இசக்கி, ராமகிருஷ்ணன், மூக்காண்டி, வள்ளியூர் ரமேஷ், உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கப் பணம், 11 பவுன் செயின், 2 பவுன் மோதிரம், ஒரு வெள்ளி கொலுசு, 9 செல்போன், 6 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications