கேபிள் டிவி நிறுவனம் மூலம் மோசடி – ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கைது
கோவை: உரிமம் இல்லாமல் கேபிள் டிவி நிறுவனம் நடத்தி மோசடி செய்த ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
கோவை கணபதி போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் அண்ணாதுரை (60). இவர் கோவை ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் தனியார் நிறுவனங்களின் டி.டி.எச். ஆண்டனாவை வீட்டில் வாங்கி வைத்து அதன் மூலம் காவலர் குடியிருப்பு மற்றும் சேரன்மாநகர் பகுதிகளில் உள்ள சுமார் 200 வீடுகளுக்கு கேபிள் மூலம் அனுமதி இல்லாமல் சேனல்களை ஒளிபரப்பினார். இதற்காக மாதம் ரூ.50 மட்டுமே வசூல் செய்தார்.
கடந்த 1 வருடத்திற்கும் மேலாக இந்த கேபிள் நிறுவனத்தை அவர் நடத்தி வந்துள்ளார். மாத கட்டணம் ரூ.50 என்பதால் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் ஏற்கனவே இருந்த கேபிள் இணைப்பை துண்டித்து விட்டு இவரிடம் இணைப்பை பெற்றனர். இதனால் அந்த பகுதியில் உரிமம் பெற்று கேபிள் நடத்தி வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கேபிள் நிறுவன மேலாளர் ராஜேஷ் போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் சுரேஷ், சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய குமார் ஆகியோர் போலி கேபிள் நிறுவனம் நடத்தும் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அங்கிருந்து தனியார் நிறுவன டி.டி.எச். ஆண்டனா செட்டப்பாக்சை பறிமுதல் செய்தனர். மேலும் எந்த உரிமமும் பெறாமல் டி.டி.எச். மூலம் வீடுகளுக்கு கேபிள் வழங்கி மோசடி செய்ததாக முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, அவரது மகன் ஸ்ரீராம், உதவியாளர் குமரேசன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications