பிடிபட்டதும் லஞ்சப் பணத்தை விழுங்கிய அதிகாரி - விரலை விட்டு எடுத்தனர் போலீஸார் !
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீசாரைக் கண்டதும், லஞ்சப் பணம் ரூ 10,000 -யை விழுங்க முயன்ற மின் வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி, தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் சிவபாரதி (28). டிராவல்ஸ் வைத்துள்ளார்.
இவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, உலர் மின் சலவையகம் கட்டியுள்ளார். அதற்கு மின் இணைப்பு பெற, கடந்த ஏப்ரல் மாதம் 30 ம் தேதி மின் வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் திருப்பதி (44) என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார்.
அதற்கான அறிக்கை தயாரித்து, சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, திருப்பதி 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து சிவபாரதி, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில், தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் வைத்து சிவபாரதி, திருப்பதியிடம் 10,000 ரூபாயை முதற்கட்ட லஞ்சமாகக் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திருப்பதி 500 ரூபாய் நோட்டு கட்டை அப்படியே வாய்க்குள் திணித்து, விழுங்க முயன்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திருப்பதியின் வாய்க்குள் விரலை விட்டு, லஞ்சப்பணத்தை வெளியே இழுத்து மீட்டனர்.
இதனால், திருப்பதி வாய்க்குள் காயம் ஏற்பட்டு, லஞ்சப்பணத்தில் ரத்தக்கறை படிந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications