ஜெய்ராம் தந்த ராஜினாமா கடிதம்-நிராகரித்த பிரதமர்!

சமீபத்தில் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜெய்ராம் ரமேஷ் அங்கு நிருபர்களிடம் பேசுகையில், சீனாவுடனான வர்த்தக விஷயத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் மிகுந்த எச்சரிக்கை காட்டுகிறது. இத்தகைய அதீத எச்சரிக்கை தேவையற்றது என்றார்.
இதையடுத்து அவர் சீனாவில் இருக்கும்போதே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அவரது பேச்சை கண்டித்ததோடு விளக்கம் தருமாறும் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து டெல்லி வந்த ஜெய்ராம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து தன்னிலை விளக்கம் தந்தார். மேலும் பிரதமர் மற்றும் சோனியா காந்தியையும் சந்தித்து விளக்கம் தந்தார்.
ஆனால், ஜெயராம் விளக்கத்தில் சிதம்பரம் திருப்தியடையவில்லை.
இதையடுத்து தனது பதவியை ராஜினாமா ராஜினாமா செய்து சோனியாவிடமும் பிரதமரிடமும் ஜெய்ராம் கடிதம் தந்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின.
இந் நிலையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜெய்ராம் கடந்த திங்கள்கிழமையன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். ஆனால், பிரதமர் அதை அன்றே நிராகரித்து விட்டார்.
ஜெய்ராம் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
சிதம்பரம் மன்னிக்க வேண்டும்-திக்விஜய் சிங்:
அதே போல சில வாரங்களுக்கு முன் நகஸல்கள் விவகாரத்தில் சிதம்பரத்தைப் பற்றி மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்த மூத்த காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங் திடீர் பல்டி அடித்துள்ளார்.
தனது கருத்து சிதம்பரத்தி்ன் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கவும் தயார் என்றும், எனது கருத்துக்களை வாபஸ் பெற்று கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங், ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்றும், எனது கருத்துக்களை வாபஸ் பெற்று கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications