ரூ. 5 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவியைக் கடத்திய இருவர் கைது
சிவகாசி: ரூ. 5 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவியைக் கடத்திய இரண்டு பேர் அடங்கிய கும்பலை சிவகாசி போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிவகாசியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. ஆடிட்டரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பபிதா, கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை கல்லூரிக்குப் போன இவர் மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் ராமமூர்த்தி புகார் கொடுத்தார்.
போலீஸார் பபிதாவை கண்டுபிடிக்க நடவடிக்கையைத் தொடங்கினர். இந்த நிலையில் ராமமூர்த்திக்கு ஒருவர் போன் செய்து, உங்கள் மகளை நாங்கள்தான் கடத்தியுள்ளோம். ரூ. 5 லட்சம் பணம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என கூறியுள்ளனர்.
பின்னர் மீண்டும் ஒருமுறை ராமமூர்த்தியை தொடர்பு கொண்டார் அந்த மர்ம நபர். இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்தார் ராமமூர்த்தி.
போலீஸார் நடத்திய விசாரணையில்,இரு செல்போன் அழைப்புளும், சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையிலிருந்து வந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். அந்த சாலையில் உள்ள வனப் பகுதியில் பபிதா அடைத்துவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்து அங்கு விரைந்து சென்று பபிதாவை மீட்டனர்.
அவரை கடத்தி வைத்திருந்த முத்துப்பாண்டி, மதன்குமார் ஆகிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்னர். மேலும் இருவர் தலைமறைவாகி விட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications