நளினியை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறார்கள் - கணவர் முருகன் புகார்
வேலூர்: எனது மனைவி நளினியை தற்கொலை செய்து கொள்ள சிறைத் துறையினர் தூண்டுகிறார்கள் என்று புகார் கூறியுள்ளார் அவரது கணவர் முருகன்.
வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னைக் கொலை செய்ய முயற்சி நடப்பதாகவும், சிறை அதிகாரிகள் தன்னை சித்திரவதை செய்வதாகவும் புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நளினியின் கணவரும், தூக்குத் தண்டனைக் கைதியுமான முருகன் சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், சிறைத்துறையினர் எனது மனைவி நளினியை தற்கொலை செய்து கொள்ள தூண்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
முருகனின் கடிதத்தால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications