மீ்ண்டும் பாஜகவுக்கு திரும்பும் ஜஸ்வந்த் சிங்-உமா பாரதி
டெல்லி: ஜஸ்வந்த் சிங், உமா பாரதி ஆகிய மூத்த தலைவர்கள் மீ்ண்டும் பாஜகவுக்குத் திரும்புவர் என்று தெரிகிறது.
இருவரையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர மூத்த தலைவரான அத்வானி மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் பலனளிக்க ஆரம்பித்துள்ளன.
வரும் ஜூன் 12ம் தேதி பாட்னாவில் நடக்கும் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்துக்கு முன்பே உமாவும் சிங்கும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவர் என்று தெரிகிறது.
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க கடந்த ஆண்டு சிம்லாவில் நடந்த பாஜக உயர் மட்டக் கூட்டத்தில் தான் ஜஸ்வந்த் சிங் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து அத்வானியை மிகக் கடுமையாக தாக்கிய ஜஸ்வந்த் சிங், கட்சியை தாக்கவில்லை. இதனால் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
இதை முதலில் கண்டுகொள்ளாத அத்வானி, சமீபகாலமாக ஜஸ்வந்த் சிங் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்ற ஒரு பிரிவினரின் கோரிக்கையை ஏற்றார்.
இதையடுத்து அவரை ஜஸ்வந்த் சிங்குடன் பேசினார். மேலும் சமீபத்தில் ராஜஸ்தானுக்கு சிறப்பு விமானத்தில் சென்ற அத்வானி, ஜஸ்வந்த் சிங்கையும் உடன் அழைத்துச் சென்றார்.
உமாவுக்கு எதிர்ப்பு தொடர்கிறது:
அதே நேரத்தில் உமா பாரதியை மீண்டும் பாஜகவுக்குள் கொண்டு வர அத்வானி முயன்றாலும் மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் செளஹானில் ஆரம்பித்து அங்குள்ள பல மூத்த தலைவர்களும் உமாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் எப்படியாவது பாஜகவுக்குள் மீண்டும் நுழைந்துவிட தீவிரம் காட்டி வரும் உமா பாரதி, தனது சொந்த கட்சியான பாரதீய ஜன் சக்தியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்புகளை அடக்கி தன்னை எப்படியாவது கட்சியில் சேர்ப்பார் அத்வானி என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் உமா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications