சென்னை வருகிறார் ரோசய்யா - கருணாநிதியை சந்திக்கிறார்
சித்தூர்: ஆந்திர முதல்வர் ரோசய்யா இன்று சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார்.
இதுகுறித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சேஷாத்திரி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:
ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா ஒரு நாள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை சித்தூர் மாவட்டம் வருகிறார். இதற்காக காலை 7.40 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா செல்கிறார்.
பின்னர் திருமலை, திருப்பதி மற்றும் சித்தூர் அருகே உள்ள கலிகிரி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அந்த நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து, தனி ஹெலிகாப்டர் மூலம் மாலை 5.55 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பு முடிந்ததும் அன்று இரவே கார் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் திரும்பிச் செல்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பா அல்லது வேறு ஏதேனும் குறிப்பிட்ட விஷயத்துக்காக ரோசய்யா வருகிறாரா என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications