தமிழகத்தில் ப.சிதம்பரத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு, தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்க, உள்துறை செயலாளர் ஞானதேசிகன் உத்தரவிட்டுள்ளார்.

அவருக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுப் பிரிவு தெரிவித்துள்ளதையடுத்து 'இசட் பிளஸ்' பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் வரும் அமைச்சர் இந்தப் பாதுகாப்புகள் தேவையில்லை என்று சிதம்பரம் கூறுவதாகத் தெரிகிறது.

ஆனாலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய உளவுப்பிரிவு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, தமிழகம் வரும்போது சிதம்பரத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என, டி.ஜி.பி லத்திகா சரணுக்கு, உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன் உத்தரவிட்டுள்ளார்.

சிதம்பரம் வரும்போது சென்னை, மதுரை விமான நிலையங்கள், அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.

குறிப்பாக, அவர் சிவகங்கை மாவட்டத்தில் கட்சியினர் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, போலீசார் எண்ணிக்கையை அதிகரித்து, பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அவர் வருவதற்கு முன் பங்கேற்கும் நிகழ்ச்சி- இடங்களை கடுமையாக சோதனையிட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+