தென் மாவட்ட அதிமுகவினர் விரைவில் திமுகவில் இணைவார்கள்- அழகிரி

மதுரை அருகே, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், அதிமுக, மதிமுக, தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த 2000 பேர் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அழகிரி கூறுகையில்,
நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொண்டர்களை அதிகமாக நேசிப்பேன். இந்த பகுதியிலிருந்து முதல்வர் கருணாநிதியை நம்பி, முதலில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வந்தார். அவருக்கு உரிய மரியாதையை கருணாநிதி கொடுத்துள்ளார்.
அ.தி.மு.க.,வை வழி நடத்தும் ஜெயலலிதா, கட்சி பிரமுகர்களை சந்திக்காமல் கோடநாடு எஸ்டேட்டுக்கு ஓய்வுக்கு சென்று விடுகிறார். அவர் சட்டசபைக்கு வருவதில்லை. கட்சி தலைமையகத்திற்கு வந்தால் கூட நோட்டீஸ் அடித்து ஒட்டுகின்றனர். இது போன்ற தொந்தரவுகளை தாங்க முடியாமல் தான், பலர் தி.மு.க.,விற்கு வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் உள்ள மாற்றுக் கட்சி முக்கிய பிரமுகர்கள், விரைவில், தி.மு.க.வில் இணைய உள்ளனர். ஏழு மாதத்தில் தேர்தல் வரஇருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி கைப்பற்றும் என்றார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?










Click it and Unblock the Notifications