ஈழத் தமிழர் பிரச்சனை: ராஜபக்சேவை வலியுறுத்தியுள்ளோம்-கருணாநிதிக்கு பிரதமர் பதில்
சென்னை: இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் கருணாநிதி சில தினங்களுக்கு முன் எழுதிய கடிதத்துக்கு, பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க இலங்கை அதிபர் ராஜபச்சேவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், "இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாக, டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டது.
அதற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் முகாம்களில் உள்ள 47 ஆயிரம் தமிழர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று ராஜபக்சே உறுதி அளித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய - இலங்கை அரசுகள் கூட்டுத் திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்திய அரசு தனிப்பட முறையில், இடம் பெயர்ந்த தமிழர் குடும்பங்களை மறுகுடியமர்த்தி, அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ராஜபக்சேவிடம் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கவும், அங்கு வாழும் அனைத்து சிறுபான்மையினரும், குறிப்பாக தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது", என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications