2 வக்கீல்களின் உண்ணாவிரதம் வாபஸ்-மற்றவர்கள் தொடருகிறார்கள்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 7 சென்னை வக்கீல்களில் 2 பெண் வக்கீல்கள் மட்டும் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மற்றவர்கள் தொடருகிறார்கள்.
தமிழை வழக்காடு மொழியாக்க கோரி மதுரை உயர்நீதிம்ன்றத்தின் 6 வக்கீல்கள் உண்ணாவிரதம் தொடங்கினர். இது தமிழகம் முழுவதும் பரவியது.
அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் கடந்த 17-ம் தேதி முதல் சில வக்கீல்கள் உண்ணாவிரதம் தொடங்கினர்.
இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். மதுரையிலும், சென்னையிலும் உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 11 பேரில் 3 பேர் பெண்கள். இதில் அங்கையர்கண்ணி, சக்திராணி ஆகியோர் நேற்று சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்..
இதே போல் பார்த்தசாரதி, ராஜி, பன்னீர்செல்வம், செய்யாளன், முனீஸ்வரன் ஆகிய வக்கீல்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அங்கையர்கண்ணியும், சக்திராணியும் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் மற்ற 5 வக்கீல்களும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
இதே போல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உண்ணாவிரதம் இருந்து கைதாகிய பகத்சிங், ராஜேந்திரன், ராஜா, நடராஜன், பாரதி ஆகிய 5 வக்கீல்களும் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications