இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் பேச்சு
இஸ்லாமாபாத்: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் சல்மான் பஷீர் ஆகியோர் இஸ்லாமாபாதில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
2008ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திய. இந் நிலையில் மும்பை தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் மீது அமெரிக்க நெருக்குதலால் பாகி்ஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய பின்னர் கடந்த கடந்த மார்ச்சில் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்கியது.
இதுவரை இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் மட்டத்தி்ல் இரு முறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இப்போது 3வது முறையாக நிருபமா ராவ், சல்மான் பஷீர் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.
அப்போது தீவிரவாதம், காஷ்மீர் விவகாரம், ஆப்கானிஸ்தான் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய அமைப்புகளை ஒடுக்குவது தொடர்பாகவும் இருவரும் பேசினர்.
2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானுக்குச் செல்லும் முதல் மூத்த இந்திய அதிகாரி நிருபமா ராவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூலை 15ம் தேதி இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் இன்றைய சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியையும், நிருபமா ராவ் சந்தித்துப் பேசவுள்ளார்.
ப.சிதம்பரமும் பாக். பயணம்:
இந் நிலையில் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜூன் 25ம் தேதி இஸ்லாமாபாத் செல்கிறார். அப்போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கை, சிதம்பரம் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
பாக். சிறைகளில் உள்ள 17 இந்தியர்கள் விடுதலை:
இந் நிலையில் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 17 இந்தியர்களை அந்நாட்டு அரசு விடுவிக்க முடிவு செய்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்துள்ளது.
கைதிகள் வாகா எல்லைப் பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications