செம்மொழி மாநாட்டில் சுதர்சனத்துக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அப்துல் ரகுமான்

Subscribe to Oneindia Tamil

Sudarsanam
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் சுதர்சனத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் அதில் பங்கேற்க சுதர்சனம் வந்தார். மாநாட்டி மண்டபத்தில் அமர்ந்திருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவர் கோவை கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும் மருத்துவமனைக்கு ‌நேரில் சென்று சுதர்சனத்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

சுதர்சனத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களை கருணாநிதி கேட்டு கொண்டார். அதன் பேரில் சென்னை மலர் மருத்துவமனை டாக்டர் சந்திரசேகரனும், புதுவை டாக்டர் நரசிம்மனும் கோவைக்கு வரவழைக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் கவிக்கோ அப்துல் ரகுமான்:

இந் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கவிக்கோ அப்துல் ரகுமான் கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவினாசி சாலையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இப்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+