பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மமதா எதிர்ப்பு-ஆனால் காங்.குடன் சண்டை போட மாட்டாராம்!
டெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர், கெரசின் விலை உயர்வுக்கு திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேசமயம், தனது கட்சி சிறிய கட்சி என்பதாலும், காங்கிரஸ் கட்சிதான் பெரிய கட்சி என்பதாலும், இதற்கு மேல் காங்கிரஸுடன் தாங்கள் சண்டை போட மாட்டோம், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெற மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல், காஸ், கெரசின் விலை உயர்வு குறித்து மமதா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், இந்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. வருத்தப்படுகிறேன். திரினமூல் காங்கிரஸ் கட்சி இந்தமுடிவை ஏற்காது. இந்த முடிவை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
விலை உயர்வானது சாதாரண மக்களின் சமையலறை செலவில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான அமைச்சர்கள் குழுக் கூட்டத்திற்கு எங்களது கட்சி போகவில்லை. இதை நாங்கள் ஆதரிக்கவில்லை.
அதற்காக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களது ஆதரவு அரசுக்கு மிகவும் அவசியம். அது தொடரும்.
எங்கள் கட்சிக்கு 19 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், மத்திய அரசுக்கோ 271 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. நாங்கள் பெரிய கட்சி இல்லை. எனவே, எங்களுடைய எதிர்ப்பு குரலை மட்டுமே எழுப்ப முடியும். காங்கிரஸ் பெரிய கட்சி என்பதால், அந்த கட்சி தான் முடிவை எடுக்க முடியும். இந்த பிரச்சினைக்காக சண்டை போட நான் விரும்பவில்லை என்றார் மமதா.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications