30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல்
கோவை: தமிழ்மொழி, முப்பது உலக மொழிகளுக்குத் தாய் மொழியாக விளங்குகின்றது என்று தமிழறிஞர் ஜான் சாமுவேல் தெரிவித்தார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாளான சனிக்கிழமை அன்று முனைவர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் செம்மொழித் தகுதி கருத்தரங்கு நடந்தது.
இந்த கருத்தரங்கில் பங்கேற்ற தமிழறிஞர் முனைவர் ஜான் சாமுவேல் பேசுகையில்,
தமிழ் மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளுக்குத் தாயாக விளங்குகிறது. இந்த உண்மை 18 ம் நூற்றாண்டு வரை யாருக்கும் தெரியவில்லை.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியதாக அனைவரும் கருதிக் கொண்டிருந்தனர்.
ஆனால், முதன்முதலில் எஃப்.டபிள்யூ. எலியட்ஸ் என்ற வெளிநாட்டு அறிஞர்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு இடையே உள்ள தொடர்பை ஆய்ந்தறிந்து கூறினார்.
பின்பு, அறிஞர் கால்டுவெல் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தமிழ் 9 மொழிகளுக்குத் தாய் என்று தெரிவித்தார். இதில் திருந்திய மொழிகள் 5 என்றும், திருந்தா மொழிகள் 4 என்றும் அவர் தெளிவுபட கூறினார்.
இதனையடுத்து, கடந்த 1906 ம் ஆண்டில் இந்திய மொழியியல் ஆராய்ச்சி நிறுவனம் கள ஆய்வு செய்த போது தான் தமிழ் மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த 30 மொழிகளுக்குத் தாய்மொழி என்று உறுதிபட தெரிவித்துள்ளது.
ஆசிய மொழிகளான ஜப்பானிய மொழி, கொரியன் மற்றும் மத்திய ஐரோப்பிய மொழியான ஹங்கேரியன் ஆகியவற்றுடன் தமிழுக்கு உள்ள தொடர்பு தற்போது அறிஞர்கள் நடத்தும் ஆய்வுகளில் இருந்து தெளிவாகின்றது.
ஜப்பானிய மொழியியல் அறிஞரான சுமோ ஜப்பானிய மொழி தமிழ் மொழியில் இருந்து தோன்றியதாகக் கூறுகிறார். இவ்வாறு பன்மொழிகளை ஈன்றதில் தமிழ் செம்மொழியாக விளங்குகிறது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications