பாதாள சாக்கடை ஊழல் - தருமபுரி நகராட்சியில் காங்கிரஸ், திமுக மோதல்
தருமபுரி: தருமபுரியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளில் ஊழல் நடைபெறுவதாக நகர் மன்றக் கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் இடையே மோதல் வெடித்தது.
தருமபுரி நகர் மன்றக் கூட்டம் அதன் தலைவர் டி. சி. பி. ஆனந்த குமார்ராஜா தலைமையில் நடைபெற்றது. அப்போது, 28 - 29 வார்டு திமுக மன்ற உறுப்பினர் பிருந்தாமணி தனது வார்டில் உள்ள கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
ஆனால் (காங்கிரஸ்) நகர் மன்ற தலைவர் டி. சி. பி. ஆனந்த குமார்ராஜா கூட்டம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே கூட்டம் முடிந்து விட்டதாக அறிவித்துவிட்டு வெளியேறிவிட்டார்.
மக்கள் கோரிக்கைகளை கேட்காத நகர்மன்ற தலைவரை கண்டித்து கூட்ட வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென பிருந்தாமணி போராட்டத்தில் ஈடுபட்டார். பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் ஊழல் நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால் திமுக - காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications