பந்த்தை மீறி அண்ணா பலைகலையில் பி.இ. கவுன்சிங்

பந்த் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடந்தது. ஆனால், காலை கவுன்சிலி்ங்குக்கு அழைக்கப்பட்ட 116 பேரில் 88 பேர் தான் வந்தனர். பந்த் காரணமாக மற்றவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருவதை தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொதுப் பிரிவில் 1,08,910 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 92,301 மாணவர்களும், 64,399 மாணவிகளும் என மொத்தம் 1,56,700 பேர் போட்டியிடுகின்றனர்.
முதல் நாளான இன்று 200க்கு 200 மற்றும் 199 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள 570 மாணவர்கள் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டனர்.
ஆனால், காலை கவுன்சிலி்ங்குக்கு அழைக்கப்பட்ட 116 பேரில் 88 பேர் தான் வந்தனர். பந்த் காரணமாக மற்றவர்கள் வராமல் போயிருக்கலாம் அல்லது அவர்கள் மருத்துவப் படிப்பை தேர்வு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
இன்று தேர்வான மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் சேருவதற்கான ஒதுக்கீடு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 20ம் தேதி வரை நடைபெறும். கட்-ஆஃப் மதிப்பெண் 169 வரை பெற்றுள்ள 45,435 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
2வது கட்ட கவுன்சிலிங் 21ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெறும்.
இது குறித்து அமைச்சர் பொன்முடி கூறுகையில்,
பி.இ. உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து, தகுதி மதிப்பெண் குறைப்பு ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் கடந்த சில ஆண்டுகளைப் போல இம்முறை பி.இ இடங்கள் காலியாக இருக்காது.
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகங்களின் துறைகளில் 3,050 பி.இ. இடங்களும், 4 அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் 4,200 இடங்களும், 6 அரசு கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 4,519 இடங்களும், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 1,01,333 இடங்கள் என தமிழகத்தில் மொத்தம் 1,13,167 பிஇ இடங்கள் உள்ளன.
இதில் விளையாட்டுப் பிரிவில் 99 இடங்கள், தொழிற்பிரிவில் 3,781 இடங்கள், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 377 இடங்கள் என்று மொத்தம் 4,257 இடங்கள் இதுவரை நிரம்பியுள்ளன என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications