கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார் ஜெ.-தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை திரும்பினார். கொடநாட்டிலிருந்து சென்னைக்குத் திரும்பிய தங்களது தலைவியை அக்கட்சியின் தொண்டர்கள் தடபுடலாக வரவேற்றனர்.
கடந்த மாதம் 11ம் தேதி அவர் தோழி சசிகலாவுடன் சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை சென்றார். அங்கிருந்து கார் மூலம் நீலகிரி மாவட்டம் கொடநாடு சென்றார். அங்குள்ள தனது எஸ்டேட்டில் கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாக தங்கியிருந்தார்.
இந் நிலையில் அங்கு அவர் விதிகளை மீறி மாபெரும் டீ எஸ்டேட் கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அது குறித்து விசாரிக்க அதிகாரியை நியமித்தது தமிழக அரசு.
இந்த விசாரணை தொடங்கவுள்ள நிலையில் ஜெயலலிதா இன்று கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார். கொடநாட்டிலிருந்து காரில் புறப்பட்டு கோவை சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வரவேற்புக்குப் பின்னர் ஜெயலலிதா தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
கோவையில் 13ம் தேதி ஜெ ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, போலி மருந்து-காலாவதியான மருந்து, நூல்விலை உயர்வு, உர மானியம் குறைப்பு, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஜெயலலிதா தலைமையில் வரும 13ம் தேதி கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் பங்கேற்க கோவை செல்லும் ஜெயலலிதா, அங்கிருந்து அப்படியே மீண்டும் கொடநாடு செல்வாரா அல்லது சென்னைக்கு திரும்புவாரா என்று தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications