செப்டம்பரில் போக்குவரத்து ஊழியர்கள் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை
நெல்லை: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.
இந்த பேச்சுவார்த்தை போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு தலைமையில் சென்னையில் நடத்தப்படும். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று ஊதிய உயர்வு தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள். கடந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கூட்டம் 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி சென்னையில் நடந்தது. அதில் 1-9-2007 முதல் 31-8-2010 வரை ஊதிய உயர்வு முடிவு செய்யப்பட்டது.
ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இதனால் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை செம்படம்பர் மாதத்தில் நடத்த உள்ளதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழகங்கள் செய்து வருகின்றன. புதிய ஊதிய உயர்வை அனைத்து ஊழியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications