சொத்து வரி வழக்கு-ஜெயாவை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: சொத்து வரி வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுவிக்க முடியாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

1993-94ம் ஆண்டுக்கான சொத்து வரியை தாக்கல் செய்யாத ஜெயலலிதா மீது வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக சென்னை எழும்பூர் முதலாவது கூடுதல் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கடந்த ஆண்டு இதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அந்த மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். ஆனால், ஜெயலலிதாவை விடுவிக்க முடியாது என்றும், 3 மாதத்திற்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் எழும்பூர் முதலாவது கூடுதல் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்னொரு மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வேல்முருகன், ஜெயலலிதா மீது உள்ள சொத்து வரி வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+