குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளத்தில் சிக்கிய பயணிகள்!
தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான புனலூர், தென்மலை, ஆரியங்காவு, கண்ணுபுளிமேட்டு, ஐந்தருவி, குற்றாலம் வனப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றாலம் ஐந்தருவியில் நேற்றிரவு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் கயிறு கட்டி சுற்றுலா பயணிகள் யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை. ஆனால், தண்ணீர் வேகம் ஒரு பக்கம் குறைந்தவுடன் சில பயணிகள் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அங்கு ஜோராக குளியல் போட்டனர்.
குற்றாலம் மெயினருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் அங்கும் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த வெள்ள பெருக்கில் சிலர் சிக்கினர்.
அவர்களின் அலறலை தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் மற்றும் பொது மக்களை காப்பாற்றினர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளபெருக்கில் வேறு யாராவது சிக்கினார்களா, என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளம் ஏற்பட்டவுடன் அருவிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். காவல்துறை அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்த பின் மீண்டும் சப்ளை வழங்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications