துர்க்கை வடிவில் போஸ்டர்-சோனியா காந்தி, ரீட்டா பகுகுணாவுக்கு பீகார் கோர்ட் சம்மன்
முசாபர்பூர் (பீகார்): சோனியா காந்தியை துர்க்கை அம்மன் வடிவில் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பான வழக்கில் சோனியா காந்திக்கும், உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணாவுக்கும் பீகார் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜூலை 29ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு துர்க்கை வடிவில் சோனியா காந்தி இருப்பது போன்ற போஸ்டர்கள் உ.பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டன. இதையடுத்து முசாபர்பூர் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதில் சோனியா காந்தியை இந்துக் கடவுளாக சித்தரித்து போஸ்டர் ஒட்டியதன் மூலம் இந்து மதத்தை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.ஸ்ரீவத்சவா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக நேரிலோ அல்லது தனது வழக்கறிஞர் மூலமாகவோ சோனியா காந்தியும், ரீட்டா பகுகுணாவும் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications