பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர் டி.எஸ்.பி. ஆவதில் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பதவி உயர்வு பெற்ற நெல்லை இன்ஸ்பெக்டர் டி.எஸ்.பி. ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நெல்லை ஆயுதப்படை பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் வின்சென்ட். கடந்த ஆண்டு இவர் அங்கு பணியாற்றிய ஏட்டு பாலகிருஷ்ணன் என்பவரை அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் தேனி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் பெரியகுளம் போக்குவரத்து ஆய்வாளராக இருந்த வின்சென்டிற்கு சமீபத்தில் டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு கிடைத்தது. தமிழகம் முழுவதும் பதவி உயர்வு அளிக்கப்பட்ட 44 டி.எஸ்.பி.க்களில் இவரும் ஒருவர். வின்சென்ட் கரூர் ஆயுதப்படை டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் பாளையங்கோட்டை ஏட்டு பாலகிருஷ்ணனனை அவதூறாக பேசிய புகாரின் விசாரணை இன்னும் முடிவடையாததால் அவருக்கு பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நெல்லையில் இருந்து ஐ.ஜி. அலுவலகத்திற்கு பேக்ஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் வின்ஸ்சென்ட் பெரியகுளம் போக்குவரத்து ஆய்வாளர் பணியிலிருந்து விடுவிக்கப்படவில்லை. இதனால் பதவி உயர்வு கிடைத்தும் அவர் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+