சென்னை தொழில் அதிபர் வீட்டில் 300 பவுன் நகை, ரூ. 6 லட்சம் கொள்ளை
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பஸ் அதிபர் வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து கதவை உடைத்து 300 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
அத்தோடு ரூ. 6 லட்சம் ரொக்கப் பணத்தையும் சுருட்டி விட்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவி (35). இவர் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பாரதிவேலுவின் தம்பி மகன். சஞ்சீவியின் குடும்பத்தினருக்கு 4 பஸ் கம்பெனிகள் உள்ளன.
சஞ்சீவி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தாம்மாள் காலனியில் 2-வது தெருவில் மனைவி நிரஞ்சினி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர் குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றிருந்தார்.
இதனால் கார் டிரைவரை வீட்டை பார்த்துக் கொள்ளும்படி விட்டுச் சென்றார். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.6 லட்சம் ரொக்கம், 300 பவுன் தங்க, வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
தகவல் அறிந்ததும் சஞ்சீவி சென்னைக்கு விரைந்து வந்தார். இது குறித்து தேனாம்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் கண்ணபிரான் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வீட்டின் பாதுகாப்புக்காக விட்டு சென்ற கார் டிரைவர் தலைமறைவாகி உள்ளார். அதனால், போலீசாரின் சந்தேகப் பார்வை அவர் மீது விழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications