மெக்சிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவு: ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு

கடந்த ஏப்ரல் 20ம் தேதி மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலில் எண்ணெய் தோண்டியெடுக்கும் மேடையில் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் பலியாயினர்.
அப்போது ஒரு பெரிய எந்திரம் உடைந்து கடலுக்குள் விழுந்ததில் மாபெரும் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா பெட்ரோலிய எண்ணெய் கடலில் கசிய ஆரம்பித்தது.
இதையடுத்து அதை அடைக்கும் பணிகள் 3 மாதமாக நடந்தன. ஆனால், இம்மாதத் தொடக்கத்தில் கசிவு அடைக்கப்படும் வரை அந்த இடத்தில் இருந்து இடைவிடாமல் எண்ணெய் சகிந்து வந்தது. இப்போதும் சிறிதளவு எண்ணெய்க் கசிந்து கொண்டு தான் உள்ளது.
இதனால் கடல் பகுதியில் பல நூறு கி.மீ. பரப்பளவில் எண்ணெய் படலம் பரவியுள்ளதால் இந்தப் பகுதியில் மீன் பிடிப்பு மற்றும் கடல் சார்ந்த பணிகளும் சுற்றுலாவும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 17,000 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
குறிப்பாக லூசியானா, புளோரிடா, அலபாமா, மிஸிஸிபி, டெக்ஸாஸ் மாகணங்களின் மீன் பிடி தொழிலும் கடல் சார்ந்த சுற்றுலாத் தொழில்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் தோண்ட 6 மாத தடையும் விதிக்கப்பட்டுவிட்டது. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
மேலும் இந்த எண்ணெய்க் கசிவால் பொருளாதார பாதிப்புகளோடு சூற்றுச்சுழல் பாதிப்புகளையும் கணக்கில் சேர்த்தால் நஷ்டம் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய்க் கசிவால் அப்பகுதியில் மீன்கள் உள்பட கடல்வாழ் உயிரினங்களும் செத்து மிதந்து வருகின்றன. மீ்ன்பிடி படகுகளும் சுற்றுலா படகுகளும் கப்பல்களும் இந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பகுதியை தொடர்ந்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் ரூ. 10,000 கோடிக்கு மேல் செலவிட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications