அமித் ஷாவிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ

குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் மூன்று நாட்கள் இந்த விசாரணை நீடிக்கவுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணையை சிபிஐ ஒளிப்பதிவு செய்து வருகிறது.
குற்றப்பத்திரிகை லீக்: சிபிஐ மீது ஜேத்மலானி புகார்:
இதற்கிடையே அமித் ஷாவுக்கு எதிரான குற்றப் பத்திரிகையை சிபிஐ தான் கசியவிட்டது என்று பாஜக ராஜ்யசபா எம்பியும் அமித் ஷாவுக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், சோராபுதீன் போலி என்கெளண்ட்டர் வழக்கில் அமித் ஷா மீதான குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் நாள்தோறும் மீடியாக்களில் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு இதுவரை குற்றப்பத்திரிகையின் நகல் அளிக்கப்படவில்லை.
சிபிஐயின் இத்தகையை செயலை பார்க்கும் போது அது அமித் ஷாவுக்கு எதிராக தவறுதலாகப் பயன்படுத்துவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதை நான் கண்டிக்கிறேன்.
அமித் ஷாவிடம் சிபிஐ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளும், அதற்கு அவர் அளிக்கும் பதில்களும் விடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அமித் ஷாவிடம் நடக்கும் விசாரணையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதை சிபிஐ மதித்து நடக்க வேண்டும் என்றார் ராம் ஜேத்மலானி வலியுறுத்தினார்.
நேற்று ராஜ்யசபாவில் எம்பியாக பதவியேற்றவுடன் இந்த வழக்கில் ஆஜராக ஜேத்மலானி அகமதாபாத் விரைந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications