கசாப் வழக்கு ஆகஸ்ட் 12க்கு ஒத்திவைப்பு: மேல் முறையீடு செய்ய அரசு முடிவு
மும்பை: 26/11 தீவிரவாத தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முஹம்மது அஜ்மல் கசாபின் தண்டனையை உறுதி செய்வதை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய் மற்றும் விஜயா தகில்ரமணி ஆகயோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஹிம் அன்சாரி, சபாவுத்தீன் ஷைக் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து விரைவில் மாநில அரசு மேல் முறையீடு செய்யும் என அரசு வழக்கறிஞர் பாண்டுரங் அறிவித்ததை அடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த இருவரும் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு காரணங்களால் இன்று கசாப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதற்கு முன் கசாப் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதால் மஹாராஷ்டிர அரசு செலவில் அமின் சொல்கார், பர்ஹானா ஷா ஆகியோர் கசாபுக்காக வாதாட நியமிக்கப்பட்டுள்ளனர்.
சொல்கார் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை. கசாப் மேல்முறையீடு செய்ய 2 மாத அவகாசம் கேட்டுள்ளார் ஷா. ஆகஸ்ட் 12-ம் தேதி சொல்கார் மற்றும் அரசு வாதங்களை கேட்ட பிறகே எந்த உத்தரவும் வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கசாப்பின் மரண தண்டனையை உறுதிபடுத்தும் தனது தீர்ப்பை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டது. கசாப் உள்ளிட்ட 10 தீவிரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையின் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்கள் 166 பேரை கொன்றுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள உஜ்வால் நிகாம் என்பவரை கசாப்பின் தண்டனையை உறுதி செய்வது குறித்து வாதாடவும், அன்சாரியும், அஹமதும் விடுவிக்கப்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அரசு நியமித்துள்ளது.
இன்று நிகாம் நீதிமன்றத்திற்கு வராததால், அரசு சார்பாக அரசு வழக்கறிஞர் பாண்டுரங் ஆஜரானார். மரண தண்டனையை உறுதி செய்வது, கசாப் மற்றும் அரசின் மேல் முறையீடுகளையும் உயர் நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் என எதிர்பாரக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 6-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கசாப் செய்தது மன்னிக்கக்கூடிய குற்றம் அன்று. எனவே, கசாப்பிற்கு ஆயுள் தண்டனை விதிக்காமல் மரண தண்டனை விதிப்பதே உகந்தது என்று கூறியுள்ளது.
கசாப் தற்போது ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் வெடி குண்டோ, துப்பாகி குண்டோ துளைக்கமுடியாத தனி அறையில் வைக்கப்பட்டுள்ளான்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications