'வேலைகள் இந்தியாவுக்கு போகாமல் தடுத்ததால் தப்பினோம்'

அட்லாண்டாவில் தனது ஜனநாயகக் கட்சிக்கு நிதி திரட்டும் கூட்டத்தில் ஒபாமா கூறியதாவது:
கடந்த ஆண்டு ஜனவரியில் நான் அதிபராகப் பதவியேற்றபோது நாடு பொருளாதாரரீதியில் பெரும் சவால்களை சந்தித்துக் கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டு கால குடியரசுக் கட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டின் நிதி நிலைமை அதாள பள்ளத்தில் இருந்தது.
மக்களிடம் நிதிப் புழக்கம் குறைந்ததும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேங்கிப் போனதும், நாட்டின் கடன் பல மடங்காக அதிகரித்ததும் தான் ஜார்ஜ் புஷ் ஆட்சியின் பலன்.
பெரும் பணக்காரக்களுக்கு வரியைக் குறைத்தும், நடுத்தர குடும்பங்கள், தொழிலாளர் வர்க்கத்தினருக்கு வரியை அதிகரித்தும் பெரும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் 10 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டதால் தான் நாடு இந்த நிலைமைக்கு வந்தது.
நான் பதவிக்கு வந்தவுடன் பங்குச் சந்தை பேராசைக்காரர்களுக்கு உதவுவதை விட உழைப்பாளிக்கு உதவும் பொருளாதார திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். இதனால் தான் நிலைமை மாறியது.
நடுத்தர மக்களின் வாழ்க்கையை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். வேலைவாய்ப்புகளும் தொழிற்சாலைகளும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போய்விடாமல் பார்த்துக் கொண்டோம். அந்த வேலைகளை அமெரிக்காவில் உருவாக்கினோம். இதனால் தான் பொருளாதாரத் தேக்கத்திலிருந்து நாடு வெளியே வந்து கொண்டிருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications
