ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிளாக்பெர்ரிக்கு தடை!
துபாய்: இனி ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் பிளாக்பெர்ரி போன்கள் மூலம் இமெயில், இணையதளம் பார்ப்பது மற்றும் தகவல்கள் பரிமாறிக் கொள்ள முடியாது.
உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுப் பயணிகளின் பிளாக்பெர்ரிகளுக்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் அக்டோபரிலிருந்து இந்தத் தடை அமலுக்கு வரும் என அந்நாட்டு தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஸ்மார்ட் போன் வகைகளுக்கும், ரோமிங் சேவைகளுக்கும் கூட இந்தத் தடை விரிவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விளக்கம் தெரிவித்துள்ளது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வர்த்தக நிமித்தமாகச் செல்லும் பயணிகள் பெருமளவு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாய் விமான நிலையத்துக்கு மட்டும் நாளொன்றுக்கு 1 லட்சம் பயணிகள் சராசரியாக வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications