காடு ஆறுமாதம், நாடு ஆறுமாதம் என இருக்கிறார் ஜெ.-கயல்விழி அழகிரி விளாசல்
சென்னை: காடு ஆறுமாதம், நாடு ஆறுமாதம் என்று இருந்து வரும் ஊழல் ராணி ஜெயலலிதா தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அழகிரி.
சென்னையில் நடந்த திமுக இளைஞர் அணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கயல்விழி பேசுகையில்,
காடு ஆறுமாதம், நாடு ஆறுமாதம் என்று இருந்து வரும் ஜெயலலிதாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஊழல் ராணி ஜெயலலிதா தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். இதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாங்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக நிற்கிறோம் என்றார்.
கவிஞர் தமிழச்சி பேசுகையில், ஜெயலலிதா ஒரு ஊழல் ராணியாக இருக்கிறார் என்பதை தோலுறித்துக் காட்டும் வண்ணம், மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து இன்று நடைபெறுகிறது.
தமிழக மக்கள் தங்களின் ஞாபக சக்தியின் விளைவாக வரும் தேர்தலிலும் இந்த அம்மையாருக்கு வலுவான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications