இந்தியா, பாக்.கில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம்-அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே மேற்கண்ட நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க குடிமக்கல் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் எனவும் அது அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் செய்தியில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக அமெரிக்க இலக்குகளையும், அமெரிக்கர்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம்.
இந்தியாவில் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீது தீவிரவாதிகள் குறி வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சொகுசு ஹோட்டல்கள், ரயில்கள், ரயில் நிலையங்கள், மார்கெகட்கள், தியேட்டர்கள், மசூதிகள், ரெஸ்டாரென்ட்டுகளை அவர்கள் குறி வைக்கிறார்கள்.
இந்தியா உள்ளிட்ட மேற்கண்ட பிராந்தியங்களில் லஷ்கர் இ தொய்பா, தலிபான், அல் கொய்தா உள்ளிட்ட தீவரவாத அமைப்புகளால் அமெரிக்கர்களுக்கும், அமெரிக்க நலன்களுக்கும் மிரட்டல்கள் தொடருகின்றன.
எனவே இந்த நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications