கை கோர்த்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்-கூட்டணி குறித்து ஜெ. சூசகம்

கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை மிஞ்சும் வகையில் பெரும் கூட்டத்தைக் கூட்டி நேற்று திருச்சியில் ஜெயலலிதா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது அதிமுக.
கோவைக் கூட்டத்தில் கூறியதைப் போல இந்தக் கூட்டத்திலும் முதல்வர் கருணாநிதி குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை வைத்தார் ஜெயலலிதா. மேலும் கருணாநிதிக்கு புதிய பட்டப் பெயரையும் அவர் சூட்டினார்.
வெள்ளமென திரண்டிருந்த அதிமுகவினர் கூட்டத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நின்றபடி பேசிய ஜெயலலிதா தொண்டர்களை குஷிப்படுத்தும் வகையில் காங்கிரஸுடன் கூட்டணி என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டிப் பேசினார்.
அவரது பேச்சின் நகல் செய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்டபோது அதில் கை என்ற வார்த்தைக்கு மேல் குறியிடப்பட்டிருந்தது. மேலும் கை என்று அவர் கூறுகையில் சற்று அழுத்தமாகவே கூறினார்.
ஜெயலலிதா பேசுகையில், இந்த தீய சக்திகளை அகற்ற, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் அனைவரும் 'கை' கோர்த்து செயல்பட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. வெற்றி நம்மை அழைக்கிறது. களப்பணி ஆற்றத் தயாராகுங்கள் என்றார் ஜெயலலிதா.
'திருக்குவளை தீய சக்தி'
மேலும் முதல்வர் கருணாநிதிக்கு புதிய பட்டப் பெயரையும் அவர் சூட்டினார். இனிமேல் அப்படித்தான் அவரை அழைக்கப் போகிறேன் என்றும் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஒருவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். கருணாநிதி என்று பெயரைச் சொல்லி அழைக்கிறேன் என்று வருத்தப்பட்டிருக்கிறார் கருணாநிதி.
என்னை ஜெயலலிதா என்று அழைத்தால் நான் தவறாகக் கருதமாட்டேன். ஜெயலலிதா என்பது பெற்றோர் வைத்த பெயர். அதைச் சொல்லி அழைப்பதில் தவறில்லை.
நேருவையும், இந்திராவையும், காமராஜரையும் பெயரைச் சொல்லித்தானே குறிப்பிடு கிறோம். அதனால் அவர்களின் மதிப்பு ஒன்றும் குறைந்து விடவில்லையே? நாடாளுமன்றத்தில் பேசும்போது அதிமுக எம்பிக்கள், புரட்சித் தலைவி என்றோ, அம்மா என்றோ குறிப்பிட்டுப் பேச வேண்டாம் எனக் கூறியிருக்கிறேன். அவ்வாறு சொல்லுவதால், பிற்காலத்தில் அவைக் குறிப்புகளைப் படிக்கும்போது, உண்மையான பெயர் வரும் சந்ததிக்குத் தெரியாமலே போய்விடலாம்.
இருப்பினும், பெயரைச் சொல்லி அழைப்பது கருணாநிதிக்கு வருத்தத்தை அளிப்பதால், அவருக்கு எம்ஜிஆர் சூட்டிய பட்டப் பெயரைச் சொல்லி கூப்பிடலாம் என்று இருக்கிறேன். எம்.ஜி.ஆர். கருணாநிதிக்கு சூட்டிய படட்ப் பெயர் என்ன தெரியுமா, தீய சக்தி.
இனிமேல் கருணாநிதிக்கு 'தீயசக்தி' என்ற பெயரைச் சூட்டுவோம். திருக்குவளை தீயசக்தி என்றே கருணாநிதியை அழைப்போம் என்றார் ஜெயலலிதா.
தனது பேச்சின் நிறைவில் 40க்கும் மேற்பட்ட முழக்கங்களை ஜெயலலிதா சொல்ல அதைக் கூடியிருந்த தொண்டர்கள் திரும்பக் கூறி போராட்டத்தை நிறைவு செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications