சேவூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது: மீட்புப் பணிகளால் மற்ற ரயில்கள் தாமதம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலால் அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், மண்ணெண்ணெய் டேங்கர்களை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சூர் நோக்கிச் சென்றது.
காட்பாடி-திருவலம் ரயில் நிலையம் இடையே உள்ள சேவூர் ரயில்வே கேட் அருகே அதிகாலை 3.20 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று ரயில் தடம் புரண்டது.
என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதோடு நின்றது. இது குறித்து காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து ஜோலார்பேட்டையில் இருந்து மீட்பு ரயில் என்ஜின் கொண்டுவரப்பட்டு காலை 6.10 மணி அளவில் தடம் புரண்ட பெட்டி மீட்கப்பட்டு சரக்கு ரயில் புறப்பட்டது.
இந்த சம்பவத்தால் தன்பாத், ஆலப்புழா பொக்காரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக சென்றது. மேலும், சரக்கு ரயில் பெட்டி மீட்பு பணிகளால் எதிர் டிராக்கில் வந்துகொண்டிருந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டது.
சரக்கு ரயிலில் சில டேங்கர்கள் காலியாக இருந்ததினால் ஏற்பட்ட அதிர்வு தான் பெட்டி தடம் புரண்டதற்கு காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications