பிரபாகரனையும், குடும்பத்தையும் காக்க கடுமையாக முயற்சித்தோம்-கேபி

கேபி கொடுத்த பேட்டி என்று கூறி படிப்படியாக வெளியாகி வருகின்றன இலங்கை இதழ்களில். அந்த வகையில், டெய்லி மிரர் இதழுக்கு கேபி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
போர் பகுதியிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவுகளை பிரபாகரன் ஏற்கவில்லை. அவ்வாறு செய்தால் புலிகள் எளிதில் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனிடையே, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி என்னுடன் தொடர்பில் இருந்தார்.
மார்ச் 2009ல், போர்நிறுத்தம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டேன். புலிகள் வசமிருந்த பொன்னேரின், பரந்தன், யானைஇறவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளை இழந்ததும் பிரபாகரன் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், இது காலம் கடந்த முடிவாக இருந்தது.
பிரபாகரனை ஒரு கப்பலில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் யோசனையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரது இந்த முடிவுக்கு காரணம் நார்வேயில் செயல்படும் புலிகளின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான நெடியவன் தான்.
இந்நிலையில், பிரபாகரன் மற்றும் குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறொரு பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு அவரது மகன் சார்லஸ் ஆண்டனி கேட்டுக்கொண்டார். தான் போர்க்களத்தில் இருந்து தொடர்ந்து போரிடப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், இந்த முடிவையும் பிரபாகரன் ஏற்கவில்லை. போர்க்களத்தில் அவரும் தொடர்ந்து இருந்து போரிட விரும்பினார்.
கடைசி முயற்சியாக பிரபாகரனை ஹெலிகாப்டர் மூலம் வன்னி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லவும், அவரது குடும்பத்தினரை சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு அழைத்துச் செல்லவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த திட்டமும் தோல்வியடைந்தது என்று கூறியுள்ளார் கேபி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications