யுஎஸ் சொன்னதால் இந்திய நிவாரண உதவியை ஏற்ற பாகிஸ்தான்

நியூயார்க் வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஷா மகமூத் குரேஷி இதுகுறித்துக் கூறுகையில், இந்தியாவின் உதவியை ஏற்க பாகிஸ்தான் சம்மதித்துள்ளது. இந்தியாவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளோம்.
இந்தியாவின் உதவியை முதலில் நாங்கள் ஏற்காததற்கு அரசியல் காரணமல்ல. நாங்கள் அரசியல் செய்யவில்லை. இஸ்லாமாபாத்தில் நான் இருந்தபோது என்னை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொலைபேசியில் தொடர்புகொண்டார். வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியானதற்கு இரங்கல் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தற்போது அதை நாங்கள் ஏற்றுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றிதெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இது நிச்சயம் நேர்மறையான அணுகுமுறை. இந்தியாவின் உதவிக்கு பாகிஸ்தான் கடமைப்பட்டுள்ளது, அதை அங்கீகரிக்கிறது.
பிரதமர் கிலானியுடன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார். வெள்ள நிலமை குறித்து கவலை தெரிவித்துள்ளார் என்றார் குரேஷி.
முன்னதாக இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்க தயங்குவது குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருந்தது. இதில் அரசியலைக் கலக்கக் கூடாது, இந்தியாவின் உதவியை ஏற்குமாறு அது பாகிஸ்தானுக்கு கண்டிப்புடன் கூறியிருந்தது. இதையடுத்தே இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications