சட்ட மாணவர் மீது தாக்குதல்-நீதி விசாரணை கோரும் சிபிஎம்
மதுரை: சட்டக் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி காவல்துறை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை...
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் அசோக்குமார் பேருந்தில் பயணம் செய்த போது சகபயணி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பேருந்திலிருந்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார்.
அங்கு, காவல்துறையினர் அசோக் குமாரை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியுள்ளனர்.இதில்அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால், அவரை செங்கல்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
மாணவர் அசோக்குமாரை விசாரணையின்றி நிர்வாணப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கடுமையாகத் தாக்கியுள்ள திருக்கழுக்குன்றம் போலீசாரின் இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மாணவர் அசோக்குமார் தாக்கப்பட்டது குறித்து தற்போது, நீதிபதியாக உள்ள ஒருவர் மூலம் நீதி விசாரணை நடத்த வேண்டும், அசோக்குமாரை தாக்கிய காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications