விசைப்படகு தொழிலாளர்கள் ஸ்டிரைக்கை தொடர முடிவு: 10 நாட்களில் ரூ. 10 கோடி நஷ்டம்
தூத்துக்குடி: இன்று முதல் மீன் பிடிக்கத் திரும்புவதாக அறிவித்திருந்த தூத்துக்குடி விசைப் படகு மீனவர்கள் மீண்டும் ஸ்டிரைக்கைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. படகு ஒன்றுக்கு 6 முதல் 18 மீனவர்கள் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். மேலும் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம் என இரு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
மீன்பிடி தொழிலாளர்கள் தங்களுக்குரிய பங்கு தொகையை 35 சதவிகிதத்தில் இருந்து 45 சதவிகிதமாக உயர்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.10 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ. மற்றும் மீன்துறை அதிகாரிகள் தலைமையில் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. மீன்பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் (23-ம் தேதி) விசைப்படகுகள் வழக்கம்போல் மீன்பிடிக்கச் செல்லும் என அறிவித்து மீன்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தனர்.
மேலும், நேற்று மாலை கடலுக்கு செல்ல ஆயத்தமான படகுகளுக்கு ஐஸ் கட்டிகளை ஏற்றிக் கொண்டு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்ற லாரிகளில் இருந்து அவற்றை இறக்க விடாமல் சிலர் தடுத்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையி்ல் போலீசார் மீன்பிடி துறைமுகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications