தமிழருக்காக இதே தவறை மீண்டும் மீண்டும் செய்வேன்: சீமான்

தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் கொடுமைப்படுத்துவதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான் ராஜபக்சேவைக் கண்டித்துப் பேசினார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் உள்ள சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுரைக் கழகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சீமான் நேற்று சென்னையில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விளக்கம் கூறிய பிறகு வெளியே வந்த சீமான், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி செய்தியாளர்களிடம் கூறியது:
"இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன், நான் பேசியதால் இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் என்றால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே செயலால் இரு நாடுகளின் உறவும் ஏன் பாதிக்கபடவில்லை.
நான் பேசியது தவறு என்றால் இந்த குற்றத்தை தூண்டி விட்ட ராஜபக்சேவிற்கு தண்டனை வழங்குவது யார் ? சீமானை சிறையில் அடைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று தமிழக அரசு பகல் கனவு காண்கிறது.
மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் தவறு என்றால் அதே தவறை மீண்டும், மீண்டும் செய்வேன்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அரசியலில் லாபம் அடைவதற்காக நான் அரசியல் இயக்கத்தை தொடங்கவுமில்லை. தமிழர் வாழ்வுரிமையைக் காப்பதுதான் எமது நோக்கம்.
இந்திய அரசியல் சாசன சட்டம் 21ன் படி தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பது தமிழனுக்கு மட்டும் கிடையாதா?" என்றார் ஆவேசமாக.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications