தாமதமான தீர்ப்பு, இருந்தாலும் மன நிறைவு அடைகிறோம்-3 மாணவிகளின் பெற்றோர் கருத்து

காலம் கடந்த தாமதமான தீர்ப்பு-கோகிலவாணி தந்தை:
உயிரோடு கருகிப் போன அப்பாவி மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறுகையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எதிர்பார்த்ததுதான், ஆனால் காலம் கடந்த தாமதமான தீர்ப்பு என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பெரும் எதிர்ப்புகளையும் மீறி போராடியவர் வீராச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு குறித்து அவர் கூறுகையில், இந்தத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் சம்பவம் நடந்து 10 ஆண்டுகாலம் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் பலர் முன்னிலையில் கண்கூடாக நடந்த சம்பவத்துக்கு இவ்வளவு காலம் கழித்து தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர்.
அதே நேரத்தில் இந்த விஷயத்தில் போராடிய அரசாங்கத்துக்கும், மாணவ மாணவிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் இந்த சம்பவத்தில் நடைபெறவே கூடாது என்று கூறியுள்ளார்.
தாமதமாக வந்தாலும் சந்தோஷம்-ஹேமலதா தாயார்:
இன்னொரு மாணவியான ஹேமலதாவின் தாயார் காசியம்மாள் கூறுகையில், வழக்கின் தீர்ப்பு தாமதமாக வந்தாலும் நான் சந்தோஷம் அடைகிறேன். என்னைப் போல பெற்றோர்கள் இனி இதுபோன்ற கொடுமையை சந்திக்க கூடாது. இந்த தண்டனையை நிறைவேற்றினால் ஓரளவாவது இனி குற்றங்கள் குறையும் என்றார்.
மனநிறைவு தருகிறது-காயத்ரியின் தந்தை :
காயத்ரியின் தந்தை வெங்கடேஷ் கூறுகையில், இன்று காலையில் இருந்தே பதட்டத்துடனும், வேதனையுடனும் இருந்தோம். இந்த தீர்ப்பு மனநிறைவை அளிக்கிறது. இது சரியான தீர்ப்பு. சேலத்தில் கொடுத்த தீர்ப்பு நிலை நாட்டப்பட வேண்டும் என்று நினைத்தோம்.
அதன்படி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. போலீசாருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications