நிரூபமா ராவைத் தொடர்ந்து ராணுவத் தளபதியும் இலங்கை விரைகிறார்
டெல்லி : மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவைத் தொடர்ந்து ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் இலங்கை செல்கிறார்.
இலங்கையில் தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கை மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் நான்கு நாள் கொழும்பு பயணத்தை மேற்கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் ராணுவத் தளபதி வி.கே.சிங்கும் கொழும்பு செல்கிறார். அதேபோலே ராணுவத்தின் பல்வேறு மட்டத்திலான தளபதிகளும் இலங்கை செல்லவுள்ளனராம்.
அதேபோல இலங்கையிலிருந்தும் ராணுவ தளபதிகள் இந்தியா வருகின்றனராம். இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடலோரப் பாதுகாப்பு போன்றவை தொடர்பாக இந்த பயணமாம்.
ராணுவத் தளபதியைப் போலவே விமானப்படை தளபதி பி.வி.நாயக், பாதுகாப்புத் துறை செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரும் இலங்கை செல்லவுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம்தான் கடற்படைத் தளபதி நிர்மல் வர்மா கொழும்பு சென்று திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.
வருகிற அக்டோபர் மாதம் இலங்கை ராணுவத் தளபதி இந்தியா வருகிறார். கருத்தரங்கில் பேசுவதற்காக அவர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த ஆண்டு இறுதியில் இலங்கை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications