கெட்டுப் போன சாம்பார் சாப்பிட்ட கருணை இல்ல குழந்தைகள் 33 பேருக்கு வாந்தி மயக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி கருணை இல்லத்தில் நேற்று அதிகாலை 33 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுஸ்போர்டு காலனியில் அன்னை கருணை இல்லம் உள்ளது. இங்கு 60க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை இங்குள்ள குழந்தைகளுக்கு ஒருவர் பின் ஒருவராக வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் 10 வயது முதல் 15 வயதுள்ள சிறுவர், சிறுமிகள் ஆவர். மொத்தம் 33 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சில குழந்தைகள் புற நோயாளியாக சிகி்ச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் குழந்தைகள் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட சாம்பார் சாதம் கெட்டுப் போனதாக இருந்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications