அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பெண்ணுக்கு வலைவீச்சு
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையை போட்டு விட்டு தலைமறைவான பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவு அருகே குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை கிடந்தது.
குழந்தையை மீட்ட ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த குழந்தை யாருடையது என அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் அந்த குழந்தையை ஒரு மூதாட்டியும், இளம்பெண்ணும் விட்டுச் சென்றதாகத் தெரிய வந்தது.
இது குறித்து மருத்துவமனை உறைவிட மருத்துவர் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குழந்தையை வி்ட்டுச் சென்ற மூதாட்டியையும், இளம்பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மீட்கப்பட்ட அந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்குள்ளேயே வந்து ஆண் குழந்தை அனாதையாக விட்டுச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications