சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்க-ஜெ.
சென்னை: கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் அறிவித்ததற்காக, சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
காலமுறை ஊதிய விகிதம், ஓய்வூதியம், பதவி உயர்வு உள்பட தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் 30.8.2010 அன்று கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
29.8.2010 முதல் வெளி மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி சத்துணவு ஊழியர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து, பெண்கள் உள்பட அனைத்து சத்துணவு ஊழியர்களும் இரவு நேரங்களில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையும் மீறி, 30-8-2010 அன்று சத்துணவு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்று இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கே.பழனிச்சாமி கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். போராட்டத்தை வாழ்த்த சென்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட பணி நீக்கம் மற்றும் இதர ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர். ஆட்சி விரைவில் மலரும்; சத்துணவு ஊழியர்களின் குறைகள் தீரும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அண்ணா பிறந்த நாள் கூட்டங்கள்:
ஜெயலலிதா வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, செப்டம்பர் 15-ந் தேதி முதல் முதல் 17-ந் தேதி வரை மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியம், நகரம் மற்றும் பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications