கேரளாவில் கள் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது: 6 பேர் தமிழர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் விஷக் கள் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தமிழர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் குற்றிபுரம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 பேர் இறந்து கிடந்தனர். மேலும் 3 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள குற்றிபுரம் மற்றும் வண்டூர் கள்ளுக் கடையில் மீத்தேன் ஆல்கஹால் அதிகளவு கலக்கப்பட்ட கள் குடித்தது தெரிய வந்தது.
அதுபற்றி மேலும் விசாரித்தபோது வெள்ளிக்கிழமை இரவே அந்த பகுதியில் பலர் பலியாகி இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் கள் குடித்தது தான் அவர்கள் சாவுக்கு காரணம் என்பது தெரியாமல் இருந்தது. ரயில் நிலையத்தில் மயங்கிக் கிடந்தவர்களை பரிசோதித்தபோது தான் உண்மை அம்பலமானது.
இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் இதுவரை கள் குடித்த 23 பேர் இறந்துள்ளனர். மேலும் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நீதி, தனசேகரன், வேலூரைச் சேர்ந்த சின்னசாமி, தி்ண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ரவிசந்திரன் ஆகியோர் அடையாளம் தெரிந்துள்ளது. மற்றொருவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் அச்சுனாந்தன் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கள்ளுக் கடை உரி்மையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications