பேரறிஞர் அண்ணா 102வது பிறந்த நாள்-சிலைக்கு கருணாநிதி அஞ்சலி
பேரறிஞர் அண்ணாவின் 102வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அண்ணா சிலைகளுக்கு திமுகவினர், அதிமுகவினர், மதிமுகவினர், தேமுதிகவினர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில், வள்ளுவர் கோட்டம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் கருணாநிதி இன்று அஞ்சலி செலுத்தினார்.அவருடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் சென்றிருந்தனர்.
அண்ணா பதக்கம்:
இதற்கிடையே காவல்துறை மற்றும் தீயணைப்பு, ஊர்க்காவல் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 127 பேருக்கு இந்த ஆண்டுக்கான அண்ணா பதக்கம் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படைப்பிரிவு, காவல்துறை விரல்ரேகைப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் காவலர்களின் சிறந்த சேவைகளைப்பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறே, 2010ம் ஆண்டு அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ம் நாள் காவல் கண்காணிப்பாளர் முதல் காவலர் நிலை வரையில் 100 காவல்துறை அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் கோட்டத்தீயணைப்பு அதிகாரி முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையில் 10 அலுவலர்களுக்கும்,
சிறைத்துறையில் உதவி சிறை அலுவலர் முதல் முதல் நிலை சிறைக்காவலர் வரை 10 அலுவலர்களுக்கும் ஊர்க்காவல் படையில் படைத்தளபதி முதல் அணித்தளபதி நிலை வரையில் 5 பேருக்கும்,
காவல்துறை விரல்ரேகைப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு துணைக்காவல் கண்காணிப்பாளர்களுக்கும் ஆக மொத்தம் 127 பேருக்கு அவர்கள் பணியில் காட்டிய மிகச்சிறந்த கடமைப்பற்றுறுதியைப்பாராட்டும் முகத்தான், தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு பதக்க விதிகள் படி, பணிநிலையின் அடிப்படையில் முறையே 2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய் ஒட்டு மொத்த மானியத் தொகையாக அளிக்கப்படும்.
இது தவிர, தீயணைப்புத் துறையில் 9 தீயணைப்போர்,காவல் துறையில் ஒரு துணைக்காவல் கண்காணிப்பாளர், ஒரு தலைமைக்காவலர் என இருவர் ஆக மொத்தம் 11 பேருக்கு அவர்கள் ஆற்றியுள்ள வீரதீரச்செயல்களைப் பாராட்டி இந்த ஆண்டிற்கான தமிழக முதலமைச்சரின் வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள் வழங்கிடவும், இப்பதக்கங்களைப் பெறும் அலுவலர்களுக்கு மாதம்தோறும் 300 ரூபாய் வீதம் பதக்கப்படியாக வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
2010க்கான தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அலுவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறவிருக்கும் விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி பதக்கங்களை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications