எனது பாதுகாப்புக்கு கருணாநிதி உத்தரவாதம் அளிக்காதது ஏன்-ஜெ.கேள்வி

மதுரை கூட்டத்தில் நான் பேசக்கூடாது என்று எனக்கு 4 மிரட்டல்கள் வந்துள்ளன. முதல் மிரட்டல் ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு வந்தது. தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததை அடுத்து தலைமை செயலாளரிடம் புகார் செய்துள்ளோம்.
மேலும் கட்சி நிர்வாகிகள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக புகார் செய்துள்ளனர்.
எனக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் வித்தியாசமாக இருக்கிறது. இதனால் கட்சி தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த மிரட்டலை கண்டு நான் பயப்பட போவதில்லை. இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். திட்டமிட்டப்படி மதுரை நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன். என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஒருவருக்கு ஒருமுறைதான் மரணம் வரும் அது எப்போது வந்தாலும் பரவாயில்லை.
இதுபோன்ற மிரட்டல்களால் எனக்கு கவலையில்லை. திட்டமிட்டப்படி மதுரை கூட்டத்துக்கு செல்வேன்.
எனக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்திருக்கிறார். ஆனால், எந்த ஆபத்தும் ஏற்படாது என்று முதலமைச்சர் உத்தரவாதம் அளிக்காதது விரோதம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு வரும் மிரட்டல்கள் வேண்டும் என்றே யாரோ செய்வது போல உள்ளது என்று முதல் இரு மிரட்டல்கள் குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை கூறியிருந்தது. பின்னர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து செய்தித் தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் செய்து அரசு அறிவித்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக டிஜிபி லத்திகா சரணும் விளக்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மேலும் 2 மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது. இதுகுறித்து நேற்று உள்துறைச் செயலாளரை சந்தித்து அதிமுகவினர் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications