தூத்துக்குடி அரசு அலுவலகத்திற்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு ஆளெடுப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மகளிர் திட்ட அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி மகளிர் திட்ட அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்துக்கு ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடத்துக்கு தற்காலிகமாக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த பணியிடத்துக்கான வயது வரம்பு 1.10.2010 அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கம்ப்யூட்டரில் பி.ஜி.டி.சி.ஏ. பயிற்சியும், தமிழ், ஆங்கிலத்தில் லோயர் டைப் செய்யத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாத தொகுப்பு ஊதியமாக ரூ.3,500 வழங்கப்படும்.
மேற்கண்ட பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திட்ட அலுவலர், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் அனைத்து சான்றிதழ்கள் நகலிலும் அரசிதழில் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பம் பெற்று அனுப்பி வைக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும், விண்ணபத்தை வரும் 4-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின்பு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications